டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார்.
கோவையில் இருந்து அண்ணாமலை நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை நேற்று மாலை சந்தித்தார்.
Had the opportunity to meet our Hon FM Smt @nsitharaman avl today and submitted various memorandums seeking her kind intervention on requests from industries in TN. Our Hon FM has always been very supportive and considerate of the issues TN industries face.
She will be in… https://t.co/4e7ZrYAdir
— K.Annamalai (@annamalai_k) October 2, 2023
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரிடம், தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழில்துறைகளின் கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் உள்ள தொழில்துறைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தீர்க்க, ஆதரவாகவும், அக்கறையுடனும் இருந்து வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.