ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்தும் "இண்டி" கூட்டணி: பிரதமர் மோடி கடும் தாக்கு!
Sep 9, 2026, 11:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்தும் “இண்டி” கூட்டணி: பிரதமர் மோடி கடும் தாக்கு!

உலகளவில் இந்தியா பாராட்டப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 3, 2023, 11:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி இருக்கும் நிலையில், “இண்டி” கூட்டணி ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்துகிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால். இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்திற்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் பா.ஜ.க. அறிவித்து விட்டது. மீதியுள்ள வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த பா.ஜ.க. மத்தியத் தேர்தல் குழுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இப்பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 19,260 கோடி ரூபாய்க்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை “இரட்டை எஞ்சின்” என்று எதிர்கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். “இரட்டை எஞ்சின்” இருப்பது நல்லதுதான். ஏனெனில், இதன் மூலம் மாநிலம் இரட்டை வளர்ச்சியைக் காண முடியும்.

பா.ஜ.க. ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. “இண்டி” கூட்டணியிடம் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமோ அல்லது வளர்ச்சி குறித்த தொலைநோக்குப் பார்வையோ கிடையாது. உலகளவில் இந்தியா பாராட்டப்படுவதை எதிர்கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பின்தங்கிய நிலையில் இருந்த மத்தியப் பிரதேச மாநிலம் இன்று வளர்ச்சிப் பட்டியலில் 10-ம் இடத்தில் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். மத்தியப் பிரதேசத்தை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். அதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டும் மிகவும் முக்கியமானது.

அன்று உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று  5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வளர்ச்சியை எதிர்க்கும் எதிர்கட்சிகள் இது நடக்கவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறார்கள். எனினும், அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் முதல் 3 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். மக்கள் வளர்ச்சியை எதிர்பார்க்கும் நிலையில், “இண்டி” கூட்டணியினர் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நடத்துகிறார்கள்.

இதன் மூலம் ஜாதி ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத்த நினைக்கிறார்கள். நாட்டு மக்கள் வளர்ச்சியை எதிர்த்தவர்களுக்கு 60 ஆண்டுகள் கொடுத்திருக்கிறார்கள். 60 ஆண்டுகள் என்பது குறைவான காலம் அல்ல. 9 ஆண்டுகளில் நாட்டில் இவ்வளவு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படுத்த முடியுமானால், 60 ஆண்டுகளில் நிறைய செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. இது அவர்களது தோல்வியைக் காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiMadya Pradesh
Share
Tweet
SendShare
Previous Post

நிர்மலா சீதாராமனிடம் கோவை தொழில்துறைகளின் கோரிக்கைகளை வழங்கிய அண்ணாமலை!

Next Post

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் நினைவு தினம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies