ஊழல் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு பஞ்சமில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு.
Mar 15, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 ஊழல் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு பஞ்சமில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒட்டு மொத்த விளையாட்டுத் துறையையும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு, மாணவர்களைத் தேர்வு செய்து அனுப்பாமல், கடந்த ஆண்டு தமிழக பள்ளி அளவிலான விளையாட்டு வீரர்களின் வாய்ப்புகளை வஞ்சித்த திமுக அரசு, பெற்றோர்கள் மற்றும் தமிழக பாஜகவின் கடுமையான கண்டனத்துக்குப் பிறகு, இந்த ஆண்டு விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்கிறோம் என்ற பெயரில், மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைக்கழித்திருக்கிறது.

ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிக்கும் தேசிய அளவிலான அணித் தேர்வு, தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்றிருக்கிறது. பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும், தங்கள் விளையாட்டுக்கான தேர்வு நடைபெறும் நகரங்களுக்கு. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால், வீரர்கள் தேர்வு நடைபெறும் இடங்களில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தித் தராமல், புறக்கணித்திருக்கிறது தமிழக அரசு.

உதாரணமாக, தமிழக அளவிலான டேக்வாண்டோ அணிக்கான தேர்வு, காஞ்சிபுரத்தில் நடைபெற்றிருக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், சரியான தங்கும் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப்பெறாமல், மழை நீர் வடிகால் ஓடையின் மீது படுத்துத் தூங்கும் அவலம் நடந்தேறியிருக்கிறது.

விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடினமாக உழைக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள், வடிகால் ஓடையின் மீது படுத்து தூங்கிக் கொண்டிருப்பது, ஒவ்வொரு பெற்றோரையும் கண்கலங்கச் செய்யும். ஆனால், இன்னார் மகன் என்ற தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லாத தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கோ, விளையாட்டுத் துறை அமைச்சருக்கோ, பள்ளிக் குழந்தைகள் குறித்து எந்தக் கவலையும் இல்லை

தமிழகத்தின் பெற்றோர்கள், தங்கள் சுய உழைப்பில், தங்கள் சுக துக்கங்களைத் தியாகம் செய்து, தங்கள் குழந்தைகளை, தேசத்தைப் பெருமைப்படுத்தும் விளையாட்டு வீரர்களாக உருவாக்கினால், அங்கு சென்று வெட்கமே இல்லாமல் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதைத் தவிர, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் விளையாட்டுத் துறை மேம்பட திமுக செய்தது என்ன?

தமிழகம் முழுவதும் தகுதியான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, தேசிய அளவில், சர்வதேச அளவில் அவர்களைக் கொண்டு செல்ல எந்த முயற்சியும் எடுக்காமல், பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்புகளைக் கூட சரிவர வழங்காமல், திமுக பொதுக்கூட்டத்துக்கு வரும் கட்சிக்காரர்களை விட தரக்குறைவாக, சின்னஞ்சிறு குழந்தைகளையும், பெற்றோர்களையும் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக விளையாட்டு வீரர்களின் நிலையே இத்தனை மோசமாக இருக்கையில், மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சி தருகிறோம் என்ற பெயரில் சிலரை வரவழைத்து, அவர்களுக்குத் தங்கும் இடம், உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்து, சில நாட்களில் அவர்களை திருப்பி அனுப்பி வைத்திருப்பது வீண் விளம்பரமே அன்றி வேறென்ன? அவர்களுக்கு, இங்கு, என்ன பயிற்சிகள் வழங்கப்பட்டன? எத்தனை நாட்களுக்கு வெறும் விளம்பரத்திலேயே அரசை நடத்துவீர்கள்?

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களின் தேர்ச்சி முறையும் சரிவர நடைபெறவில்லை, ஒவ்வொரு விளையாட்டுக்கும், தகுதியானவர்களைக் கொண்டு, தகுதியான வீரர்களைத் தேர்ந்தெடுக்காமல், ஒரு சிலரின் விருப்பத்திற்கேற்ப பாரபட்சமாக வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் பெற்றோர்கள் வைத்திருக்கிறார்கள்.

திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுத்து, தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பாமல், கண்துடைப்புக்காக தேர்ச்சிப் போட்டிகள் நடத்தி, ஒட்டு மொத்த விளையாட்டுத் துறையையும் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது திமுக.

வாய்ப்புகளையும் வழங்காமல், வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்காமல், சுய உழைப்பில் சாதிக்கும் விளையாட்டு வீரர்களின் மீது, தங்கள் சாதனை என்று சொந்தம் கொண்டாட, திமுகவுக்கு எந்தக் காலத்திலும் தகுதி இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் நிலநடுக்கம்- பொது மக்கள் அச்சம்!

Next Post

சீன அத்துமீறலை கண்காணிக்க எல்லையில் உளவுத்துறை: மத்திய அரசு ஒப்புதல்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies