3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Sep 1, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Oct 3, 2023, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வருகிற 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: heavy rainrain fall
Share
Tweet
SendShare
Previous Post

சட்டவிரோதமாக ரூ.3,500 கோடி பரிவர்த்தனை: கைதான நபருக்கு 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

Next Post

காதி சிறப்புத் தள்ளுபடி விற்பனை: தொடங்கி வைத்த ஆளுநர்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies