ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4×400மீ கலப்புத் தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது.
சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 4×400 மீ கலப்பு தொடர் ஓட்டம் நடைபெற்றது.
இந்தியா சார்பாக முகமது அஜ்மல் , வித்யா ராம்ராஜ் , ராஜேஷ் ரமேஷ் , சுபா வெங்கடேசன் ஆகியோர் பங்குபெற்றன. இவர்கள் நால்வரும் இணைந்து 3:14.34 நிமிடங்களில் பந்தய இலக்கை முடித்து மூன்றாம் இடம் பிடித்தனர்.
இரண்டாவது இடம் பிடித்த இலங்கை அணி விதி மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. ஆகையால் இந்தியா 2 வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றது.
வெள்ளி வென்ற வீரர்களுக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4×400மீ கலப்புத் தொடர் ஓட்டப் போட்டியில் நமது வீரர்கள் அற்புதமான வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இந்த அற்புதமான வெள்ளிப் பதக்கத்தை வென்ற முஹம்மது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் வெங்கடேசன் சுபா ஆகியோருக்கு வாழ்த்துக்கள் ! உங்களின் குழுப்பணி சிறப்பாக இருந்தது ” என்று பாராட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார், இதுக்குறித்து அவர், ” ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4×400மீ கலப்புத் தொடர் ஓட்டப் போட்டியில் முஹம்மது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ் மற்றும் வெங்கடேசன் சுபா ஆகியோர் வெள்ளி வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்” என்று பாராட்டியுள்ளார்.