ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கானக் குத்துச்சண்டைப் பிரிவில் இந்திய வீராங்கனை ப்ரீத்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை 61 பதக்கங்களை பெற்றுள்ளது. இப்போது இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
இன்று மகளிருக்கான 54 கிலோ எடை குத்துச்சண்டைப் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்திய அணி சார்பாக ப்ரீத்தி பவார் பங்குப்பெற்றார். இவருடன் சீன வீராங்கனை யுவான் சாங்கி பெற்றார்.
யுவான் சாங்கி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்தார். ப்ரீத்தி விளையாட்டை ஆரம்பிக்க சற்று நேரம் எடுத்துக்கொண்டார். இரண்டாவது சுற்றில் யுவானை விட ப்ரீத்தி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை காண்பித்து இரண்டு சுற்றை வென்றார் இருப்பினும் அடுத்த சுற்றுகளில் யுவான் முன்னிலை பெற்று 4-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றார். இதனால் இந்திய வீராங்கனை ப்ரீத்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய ப்ரீத்த கஜகஸ்தானின் ஜைனா ஷெகர்பெகோவாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ளார்.