ஆசிய விளையாட்டுப் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் படக்கோட்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர்களுக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைப்பெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் படகோட்டுதல் போட்டியில் அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஆகியோர் 3:53.329 வினாடிகளில் பந்தய இலக்கை எட்டியதால் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர்.
இந்த வெற்றிக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக் குறித்து அவர், “ஆடவர் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் படகோட்டுதல் போட்டியில், வெற்றிப் பெற்று வெண்கலம் வென்ற அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். அவர்கள் சிறப்பான செயல்திறனாலும் உறுதியாலும் தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளனர். இலட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்கப்படுத்தியுள்ளனர்” என்று பாராட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், ” ஆடவர் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் படகோட்டுதல் போட்டியில், வெற்றிப் பெற்று வெண்கலம் வென்ற அர்ஜூன் சிங் மற்றும் சுனில் சிங் ஆகியோருக்கு வாழ்த்துக்கள், உங்கள எதிர்காலம் முயற்சிகள் வெற்றிப் பெற மனமார வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.