சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர், தொழிலாளர்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அயராது உழைத்தவர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, பத்திரிகை ஆசிரியராக, புரட்சியாளராக, சன்னியாசியாக, சமூகச் சீர்திருத்தவாதியாக பன்முகம் கொண்ட அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களது பிறந்த தினம் இன்று. ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டியவர்.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, பத்திரிகை ஆசிரியராக, புரட்சியாளராக, சன்னியாசியாக, சமூகச் சீர்திருத்தவாதியாக பன்முகம் கொண்ட அமரர் சுப்பிரமணிய சிவா அவர்களது பிறந்த தினம் இன்று.
ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டியவர். மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர்.… pic.twitter.com/11KH8AyT3e
— K.Annamalai (@annamalai_k) October 4, 2023
மேடை தோறும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர். தொழிலாளர்கள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டு அயராது உழைத்தவர்.
மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மிகுந்த நட்பு கொண்டவர்கள். தமிழகத்தின் தேசிய மும்மூர்த்திகள் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர்கள்.
தங்களுடைய உயிரை துச்சமென எண்ணிப் போராடிய சுப்பிரமணிய சிவா போன்ற எண்ணற்ற தியாகிகளால்தான், நமது நாட்டின் அடிப்படை கட்டமைக்கப்பட்டுள்ளது. தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.