பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகை எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200ல் இருந்து ரூ.300ஆக அரசு உயர்த்தியுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. பின்னர் மத்திய அமைச்சரவைக் கூட்டம் குறித்து செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்கான மானியத் தொகை எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200ல் இருந்து ரூ.300ஆக அரசு உயர்த்தியுள்ளது எனத் தெரிவித்தார். இதனால் உஜ்வாலா திட்டத்தில் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் ஒன்றிய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்தது குறிப்பிடத்தக்கது.