ஆன்லைன் சூதாட்ட வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்க துறை அக்டோபர் 6ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.
வட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான பேர் பணத்தை இழந்துள்ளனர். இதில் பல நூறு கோடி அளவுக்கு மோசடி நடந்து இருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்து, அதுபற்றி விசாரணைமேற்கொண்டு வருகிறது.
அமலாக்க துறையின் ஆதாரங்களின்படி, ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சூதாட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் மேலும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்ப்பு உள்ளதாக அமலாக்க துறை சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.