கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் பாஜகவில் இணைந்த பாதிரியார் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளது. இங்கு பாதிரியார்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த குரியகோஸ் மாட்டம் என்ற கத்தோலிக்க பாதிரியார், இடுக்கி பாஜக மாவட்டத் தலைவர் கே.எஸ். அஜி முன்னிலையில், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த தகவல் கத்தோலிக்க தேவாலயம் தலைமைக்குத் தெரிய வரவே, இடுக்கி மாவட்டம் குரியகோஸ் மாட்டத்தின் பாதிரியார் பதவி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
பாஜகவில் இணைந்தது குறித்து, பாதிரியார் குரியகோஸ் மாட்டம் கூறுகையில், பாஜக என்பது தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சி. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக இரவு – பகல் பாராமல் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார். இன்று உலக நாடுகளே பாராட்டும் அளவு பாரதத்தின் பெருமை உயர்ந்துள்ளது. இது போன்ற நல்ல பல காரணங்களால் நான் பாஜகவில் விரும்பி இணைந்துள்ளேன் என்றார் பெருமையாக.
தொடர்ந்து பேசிய அவர், என்னைப் போலவே, பலரும் பாஜகவில் விரும்பி இணைய ஆர்வமாக உள்ளனர் என்றார்.