மாலத்தீவுகள் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸூக்கு பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய வாழ்த்து மடல் வழங்கப்பட்டது.
தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் போட்டியிட்டு 53 சதவீத ஓட்டுகள் பெற்று முகமது மூயிஸ் வென்றார்.
மாலத்தீவுகளின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள முகமது மூயிஸூக்கு நேற்று பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து கடிதத்தை மாலத்தீவுகளுக்கான இந்திய தூதர் அதிபரிடம் ஒப்படைத்தார்.