ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புத்திசாலி மனிதர் பிரதமர் மோடி என புகழ்ந்து பேசியுள்ளார்.
ரஷ்யாவில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,
பிரதமர் மோடி ஒரு புத்திசாலி மனிதர். குறிப்பாக உக்ரைனில் நடந்து வரும் மோதலில் ரஷ்யா மீது பழி சுமத்தாமல், அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுத்தார்.
இந்தியாவுடன் ரஷ்யா அரசியல் ரீதியாக நல்ல நட்புறவு வைத்துள்ளது. நிதி பாதுகாப்பு, சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தியது ஒரு மைல்கல். இதனை ரஷ்யா வரவேற்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிப்பதில் பிரதமர் மோடி சரியானதைச் செய்கிறார் எனத் தெரிவித்தார்.