உலக மூளைக்காய்ச்சல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் உலகளவில் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடமுடியாது என கருதி இந்த நாள் 2022 யில் அக்டோபர் 5 ஆகா மாற்றப்பட்டது. மூளைகாய்ச்சல் நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி சுமார் 5 முதல் 11 சதவீத உடல்நலப் பாதிப்புகள் மூளை நரம்பியல் நோய்களால் ஏற்படுகின்றன. உலக அளவில் சுமார் 12 சதவீதத்துக்கும் மேலான இறப்புகள், நரம்பியல் நோய் காரணமாக ஏற்படுகின்றன. மூளை, நரம்பியல் நோய்களின் தாக்கம் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்த மூளைக்காய்ச்சல் பாக்டீரியாவால் வரக்கூடிய ஒரு நோய்யாக உள்ளது. மூளையைச் சுற்றியுள்ள திரவம் பாதிக்கப்படும்போது மூளைக்காய்ச்சல் ஏற்படலாம். மூளை மற்றும் முதுகெலும்பை பாதிக்கக்கூடியது. இதனால் மரணம் அல்லது நிரந்தர பக்கவாதம் ஏற்படலாம். சில நேரங்களில் வைரஸ் தொற்றுகளால் கூட மூளைக்காய்ச்சல் வர வாய்ப்புகள் உள்ளது. இந்த மூளை காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் வருவதற்குச் சில காரணங்கள் உள்ளன. மூளை வேகமாக வளரும் பருவம், சின்ன வயது, நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதே முக்கியக் காரணம். இதுபோன்ற காரணங்களோடு தொற்றுகள் சுலபமாகத் தாக்கும் வயது என்பதால் குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் எளிதில் வந்துவிடுகிறது.
இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் தடுப்பூசியைச் சரியாகப் போடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் வருவதற்கான சாத்தியம் 95 சதவீதம் குறைந்துவிடும். இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குழந்தைகள், குழந்தைகள் நல மருத்துவரிடம் அறிவுரை பெற்று அதைப் போட்டுக்கொள்ளலாம்.