வள்ளலார், பிறப்பினால் ஏற்படும் சாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று பாடுபட்டவர் எனத் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வாழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களது 200 ஆவது பிறந்த தினம் இன்று.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வாழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களது 200 ஆவது பிறந்த தினம் இன்று. வள்ளலார் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே திருவருட்பா ஆகும்.
ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக, சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்ந்தவர். இறைவன்… https://t.co/cNp0tx7cfI
— K.Annamalai (@annamalai_k) October 5, 2023
வள்ளலார் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே திருவருட்பா ஆகும். ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக, சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்ந்தவர். இறைவன் ஜோதி வடிவானவன் என்றும் இறை வழிகாட்டுதலால் மட்டுமே சாதி வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றும் எடுத்துரைத்தார்.
பிறப்பினால் ஏற்படும் சாதி சமூக வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்று குறிப்பிட்டதோடு அன்பு மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்றும் பாடுபட்டார்.
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், என்பதற்காக உருவாக்கிய வடலூர் சத்ய ஞான சபை, இன்றும், தினமும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாழ்ந்த வள்ளலார் பெருமானைப் போற்றி வணங்குவோம். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.