தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் திமுக இடையே தான் போட்டி!- அண்ணாமலை.
Jul 21, 2026, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் திமுக இடையே தான் போட்டி!- அண்ணாமலை.

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

”என் மண் என் மக்கள்” நடைபயண நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் எனத தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாார் மண்டபத்தில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தேர்தல் கூட்டணி குறித்து டெல்லியிலுள்ள பாஜக மேலிட தலைவர்கள் தான் இனி கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். எனது கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன். முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும்.

கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவர்களின் விருப்பம். அதைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும். ஜனவரியில் ”என் மண் என் மக்கள்” நடைபயண நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.

சென்னையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்கள் திரட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அடுத்த 7 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக எண்ணிக்கையில் பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 2024 தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்.  தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் திமுக இடையே தான் போட்டி கூறினார். கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் சந்தோஷமோ வருத்தமோ இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்கும் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும்.

தமிழகத்தில் பாஜக வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும் தான் எனது நோக்கம் . வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்  தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றம் வரும். கூட்டணியில் யாரை சேர்ப்பது, கூட்டணியை விரிவுப்படுத்துவது குறித்தெல்லாம் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.  எந்த கட்சியும் கூட்டணி குறித்து யோசிக்காமல் முடிவெடுக்க மாட்டார்கள் ஆலோசனை தான் முடிவு எடுப்பார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் தான் பாஜக மூன்றாம் இடத்திற்கு வந்தது. ஒவ்வொரு கட்சியும் அவரவர் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் . இராதாகிருஷ்ணன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வெற்றிப் பெற வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மூன்றாவது முறை மோடி பிரதமராக வேண்டும், அதற்கான ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக பா.ஜ.க கூட்டணி முறிவால் எந்த பின்னடைவும் இல்லை. பா.ஜ.க தனித்து போட்டியிடாத கட்சி இல்லை. ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றியைப் பெற்ற கட்சி என தெரிவித்தார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

மோடி வந்தால் எல்லாம் சரியாகி விடும்: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு!

Next Post

காவி நிற உடையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

Related News

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies