அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை: அக்.31க்கு ஒத்திவைப்பு!
Feb 6, 2026, 05:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை: அக்.31க்கு ஒத்திவைப்பு!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்ட 46 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

அதன்படி, இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, இவ்வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜிக்கு எதிராக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு  சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, குற்றப்பத்திரிகையில் உள்ள சில தகவல்களுக்கு மத்திய குற்றப்பிரிவு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஏற்கனவே சட்டவிரோதப் பணபரிமாற்ற வழக்கில் அமலாத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: dmk senthil balaji
ShareTweetSendShare
Previous Post

காவி நிற உடையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

Next Post

டெல்லி மதுபான ஊழல்: ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக்க முடிவு!

Related News

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை!

செஷல்ஷ் நாட்டில் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் சிம்ஸ் மருத்துவக்குழு!

சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறன் கல்லூரி மாணவர்களை கைது செய்த போலீசார்!

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நடுக்கடலில் மயக்கமடைந்த மீனவரை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை!

தமிழகப் பெண்களுக்கும், தமிழகத்திற்கு வரும் பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத திமுக ஆட்சி! – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் – எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்!

பரவி வரும் பறவைக்காய்ச்சல், பொதுமக்களுக்கு கவனம் தேவை – நயினார் நாகேந்திரன்

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர்

பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை பிறப்பித்த அபாரதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தென்காசி அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழா கோலாகலம்!

இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் – இந்தியா – அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!

மணப்பாறை அருகே ஆற்றில் மணல் அள்ளிய 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

தொழில் போட்டி காரணமாக சேலத்தில் பானிபூரி விற்ற 14 வயது சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஈரானில் போர் பதற்றம் – அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies