காவி நிற ஜெர்சியில் கிரிக்கெட் பறிச்சிச் செய்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.
2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றுத் தொடங்கியுள்ளது. இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது.
இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சேபாக் மைதானத்தில் ஆஸ்திரேலிவுடன் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய வீரர்கள் கடுமையானப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய வீரர்கள் பயிற்சி செய்வதற்க்காக அவர்களுக்கு காவி நிறத்தில் ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் பயிற்சி செய்து வரும் இந்திய வீரர்கள் காவி நிற ஜெர்சி அணிந்துக் கொண்டு பயிற்சி செய்து வருகின்றனர்.
மேலும், இது பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பிரத்தேயக ஜெர்சி என்றும் 2011ஆம் ஆண்டு உலக கோப்பையின் போது இதே போன்ற ஜெர்சியை தான் இந்திய வீரர்கள் பயன்படுத்தினார்கள் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.