மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற உள்ள விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக, பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் கலந்து கொள்கிறார்.
சங்கம் துவங்கிய 1925-ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் விஜயசதமி விழாவை வெகு சிறப்பாகக் கொண்டாடுவது ஆர்எஸ்எஸ் வழக்கம். இந்த வருடமும், விஜயதசமி விழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், நாக்பூரில் வரும் 24-ம் தேதி விஜயதசமி விழா நடைபெற உள்ளது. இந்த விழா, ராஷ்டிய ஸ்வயம் சேவக் தலைவர் டாக்டர் மோகவன் பகவத் தலைமையில் நடை பெற உள்ளது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக, தமிழக்தைச் சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் கலந்து கொள்கிறார்.
கடந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக சந்தோஷ் யாதவ் கலந்து கொண்டார். இவர், எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை ஏறி சாதனை படைத்தவர். இதனால், அவருக்கு ஆர்எஸ்எஸ் கௌரவம் கொடுத்தது.
கொரோனா காலத்தில் கூட, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்றி, விஜயசதமி விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.