கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை எஸ்டேட்டில், கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு கேரள அரசுக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி இங்கு வந்த நக்சல் கும்பல் ஒன்று, அலுவலகத்தை உடைத்து நாசம் செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் கண்காணிப்புக் படக்கருவிகளைப் பொருத்திவிட்டு, அதைக் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம் நக்சல் படைத் தலைவர் மொய்தீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் அரசு அலுவலகம் மற்றும் கண்காணிப்பு கேமராவை அடித்து உடைத்தனர். இதனால், கேரளாவில் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு, கடும் சோதனைக்கு உட்படுத்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். இதனால், கேரளா – தமிழ்நாடு எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.