ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை முதல் போட்டியில் வெற்றிப் பெற்றது நியூசிலாந்து.
ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பைத் தொடர் இந்தியாவில் நடந்துக் கொண்டிருக்கிறது . இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் படி தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மாலன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜானி 33 ரன்களிலும், மாலன் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்ததாக களமிறங்கிய ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 77 ரன்கள் எடுத்து அணியை முன்னிலை படுத்தினர்.
அடுத்ததாக களமிறங்கிய வீரர்களெல்லாம் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஜோஸ் பட்டலர் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டைகளை இழந்து 282 ரன்கள் எடுத்தனர்.
283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக கான்வே மற்றும் வில் எங் ஆகியோர் களமிறங்கினர். வில் எங் டக் அவுட் ஆகி வெளியேற அடுத்து களமிறங்கிய ரச்சின் ரன்விந்திர மற்றும் கான்வே கூட்டணி சிறப்பாக விளையாடி, கான்வே 152 ரன்களும் ரன்விந்திர 123 ரன்களும் எடுத்து அணியை 31 ஓவர்களில் வெற்றி பெற வைத்தனர். நியூசிலாந்து அணி மொத்தமாக 30 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்ஸ் அடித்து நொறுக்கியது.
இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது ரச்சின் ரன்விந்திரவுக்கு வழக்கப்பட்டது.