கர்நாடகா மாநிலத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீசாரதா தேவி திருக்கோவிலில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார்.
தென்னிந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடமாகும். யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இந்த மடம் அமைந்துள்ளது.சிருங்கேரி சாரதா பீடம், சிருங்கேரி சாரதா மடம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத், கர்நாடக மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், சிருங்கேரி மடம் சென்றார். அவருக்கு, மடத்தின் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, சிருங்கேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீசாரதா தேவியைத் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், தேச பக்தி, இந்துக்களின் ஒற்றுமை, பாரத்தை உயர்த்தும் வகையிலான எதிர்காலத் திட்டம் குறித்து மடாதிபதியுடன் கலந்துரையாடினர்.