"நன்றி மோடி ஜி" பிரசாரம்: பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு திட்டம்!
Oct 17, 2026, 11:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“நன்றி மோடி ஜி” பிரசாரம்: பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு திட்டம்!

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியதற்கு பாராட்டு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 6, 2023, 12:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு உட்பட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு “ஸ்நேக சம்வாத்” திட்டத்தின் ஒரு பகுதியாக “நன்றி மோடி ஜி” பிரச்சாரத்தை நடத்த முடிவு செய்திருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அந்த வகையில், முத்தலாக் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்கு விடுதலை கொடுத்தார். பெண்களும் ஹஜ் பயணம் மேற்கொள்ள உரிமை பெற்றுத் தந்தார். அதேபோல, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

இதன் காரணமாக, சந்திரயான்-3 விண்கலத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றது. மேலும், நாரி சக்தி புரஸ்கார் விருதும் சாதனை பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் அதிகாரம் அளிக்கும் வகையில், நாரி சக்தி வந்தன் அதினியம் என்கிற பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்து, நிறைவேற்றியும் காட்டினார்.

இந்த நிலையில்தான், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், “நன்றி மோடி ஜி” என்கிற பிரசாரத்தை முன்னெடுக்க, பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு முடிவு செய்திருக்கிறது. இப்பிரசாரத்தின் ஒரு பகுதியாக பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதங்களை அனுப்புவார்கள்.

இப்பிரசாரத்தை இந்த மாதத்திலேயே தொடங்க பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு திட்டமிட்டிருக்கிறது. எனினும், பிரசாரம் குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்பிரசாரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் தொடங்கி, சட்டமன்றத் தொகுதிகள் வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ‘மோடி மித்ரா சம்மேளன்’ எனும் இப்பிரசாரம் ​சமூகத்தின் தொடர்புகளை எளிதாக்கும் வகையில் இருக்கும்.

இது தவிர, பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு பொதுமக்களுடனான வலுவான உறவுகளை வளர்க்க கூடுதலாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, அரசியல் சாராதவர்களையும், கட்சியின் சித்தாந்தத்துடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருப்பவர்களையும் பிரதமர் மோடியுடன் இணைக்க ‘மோடி மித்ரா’ என்கிற திட்டத்தையும் நடத்த திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக, மக்களவைத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களுடன் கூடிய ஒரு பிரத்யேகக் குழுவை நிறுவி இருக்கிறது. இக்குழுவில் மதப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இடம்பெறுவார்கள். இவர்கள் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவதிலும், பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு ஆதரவைப் பெறுவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள். அதேபோல, பொதுமக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் இணையதளம் ஒன்றையும் பா.ஜ.க. தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModiMinority wing
Share
Tweet
SendShare
Previous Post

சிருங்கேரி மடத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பகவத்!

Next Post

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிமுக்கு சுமார் 45 கோடி : மத்திய அரசு!

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies