இந்தியாவில் நடைபெற்று வரும் ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
13 வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டி அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது.
இந்நிலையில் தொடக்கப் போட்டியின் பாதுகாப்புப் பணியில் சுமார் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, உலககோப்பைப் போட்டிக்கான தொடக்க விழா அகமதாபாத்தில் இன்று தொடங்க உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. சுமார் 3500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதில் 3 கூடுதல் கமிஷனர்கள், 13 டி.சி.பி அந்தஸ்து உள்ள அதிகாரிகள், 18 ஏ.சி.பி க்கள் உட்பட 3500 போலீசார் உள்ளனர். மேலும் 500 ஊர்க்காவல்படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 9 வெடிகுண்டை செயலிழக்க செய்யும் குழுக்களும் பணியில் உள்ளனர்.
மேலும் மைதானத்தை சுற்றிப் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இதனை போலீசாரின் சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , அவர்கள் தெரிவித்தனர்.