காலநிலை மாற்றம் தொடர்பான பணிக்காக பேராசிரியர் ஜோயீதா குப்தாவிற்கு, டச்சு அறிவியலில் உயரிய விருதான ஸ்பினோசா விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், நெதர்லாந்தில் பணிபுரியும் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கு, கல்வித்துறை சார்பில், ஸ்பினோசா விருது வழங்கி கௌரவிக்கப்படும். இது ‘டச்சு நோபல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
அதன்படி நெதர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், காலநிலை மாற்றம் தொடர்பான பணிக்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஜோயீதா குப்தாவிற்கு ஸ்பினோசா விருது வழங்கப்பட்டது.
நெதர்லாந்து நாட்டின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைச்சர் ராபர்ட் டிஜ்க்ராப், டச்சு அறிவியலில் மிக உயர்ந்த விருதான ஸ்பினோசாவை வழங்கினார்.
டச்சு ஆராய்ச்சி கவுன்சில் கொடுத்த 1.5 மில்லியன் யூரேக்களை, தனது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு செலவிட விரும்புவதாக குப்தா தெரிவித்தார்.
டச்சு சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரான குப்தா, ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.