ஐசிசி உலகக் கோப்பைத் தொடங்கியுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கும் இந்தியா ஆஸ்திரேலியாப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் ஸ்ரீநிவாஸ் என்கிற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் 40 மணிநேரத்தில் விராட் கோலியின் படத்தை வரைந்து விராட் கோலியிடம் காண்பித்துள்ளார். இதை கண்ட விராட் கோலி மகிழ்ச்சியில் அந்தப் படத்தில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு அந்த இரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இதுகுறித்துப் பேசிய ஸ்ரீநிவாஸ், ” நான் 12 வயதில் இருந்து கிரிக்கெட் பார்க்கிறேன், எனக்கு விராட் கோலி என்றால் மிகவும் பிடிக்கும். நான் அவருடைய மிக பெரிய இரசிகன், கடைசி 2 ஆண்டுகளாக அவரை காண்பதற்காக நிறைய முயற்சி செய்தேன் கடைசியாக அவரை கண்டு என் கனவு நினைவாகியுள்ளது.
இதற்காக பெங்களூருக்கு சென்று முயற்சித்து பார்த்தேன் ஆனால் இன்று என் ஆசை நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஓவியத்தை கண்ட விராட் கோலி நேராக என்னிடம் வந்து நான் இதில் கையொப்பம் போட்டி தரட்டுமா என்று கேட்டார்? நானும் மகிழ்ச்சியை போடுங்கள் என்று கூறிவிட்டு உங்களோட ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன் அவரும் என்னோட புகைப்படம் எடுத்தார், என்று அந்த இளைஞர் கூறினார்.