நவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் கொலு பொம்மை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவபெருமானை மனம் உருக வழிபடும் நாளே சிவராத்திரி. ஆதிபராசக்திக்கு வழிபாடு செய்ய 9 இரவுகள் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வழிபாடு செய்யப்படும். அந்த அளவு நவராத்திரி சிறப்பு வாய்ந்தது. இந்தியாவில் நவராத்திரியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரி விழா வரும் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 24 -ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
சென்னை, வேலூர், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நவராத்திரி கொலு பொம்மைகள் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ராமர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், பெருமாள், கிருஷ்ணர், பைரவர், முருகன், விநாயகர், சமயபுரத்து அம்மன், முருகர் உள்ளிட்ட பல்வேறு சுவாமி பொம்மைகள் காகிதக்கூழ் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரை அடி முதல் இரண்டரை அடி உயரம் வரை இந்த பொம்மைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.