கிரிக்கெட் விளையாட்டிற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால், இந்தியாவில் கிரிக்கெட் மீது வெறி கொண்ட ரசிகர்களே மிக அதிகம். அந்த அளவு கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அக்டோபர் 5 -ம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்தப் போட்டி தொடங்கியது.
உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியன்ஷிப் பை தேர்வு செய்ய ஐசிசி நடத்தும் இந்த தொடர், இந்திய வரலாற்றில் தற்போதுதான் முதல்முறையாக நடைபெறுகிறது. இதனால்தான் ரசிகர்கள் வெறிகொண்டு கிரிக்கெட் போட்டியை ஆதரித்தும், உற்சாகப்படுத்தியும் வருகின்றனர்.
கடந்த 2011-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான அணி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது போலவே, தற்போதும் ஒரு அதிசயம் நடக்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், உலக கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் உயரும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ், உலகக் கோப்பை போட்டி, இந்தியாவுக்கு மிகவும் உத்வேகத்தைத் தரும் என்ற நம்புகிறோம். காரணம், 2011-ல் உலக கோப்பை நடைபெற்ற போது, அதனைக் காண 1.2 மில்லியன் பேர் கலந்து கொண்டனர் என ஆய்வுகள் சொல்கிறது.
அதுவும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் 14-ம் தேதியையொட்டி, முன்னும், பின்னும், சுற்றுலாத்துறை, ஹோட்டல்கள், போக்குவரத்துறை, குறிப்பாக பயணிகள் விமான நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் பெரும் லாபமடையும்.
ஆன் லைன் நிறுவனமான Make my Trip சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது, போட்டி நடைபெறும் அகமதாபாத் நகர் மற்றும் தர்மஷாலா ஆகிய நகரங்களுக்கு பயணம் செல்பவர்கள் அதிகரித்துள்ளனர் என்றும், குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தை கணக்கிடும்போது, 150 சதவீதம் ஹோட்டல்கள் ஹவுல்புல்லாகிவிட்டது. விமான நிறுவனங்கள் 80 சதவீதம் தற்போதே புக்கிங் செய்யப்பட்டுவிட்டது.
கடந்த காலங்களில் சினிமா, தீம் பார்க், பெரியபெரிய மால்களில் தங்களது நேரத்தையும், பணத்தையும் செலவிட்டவர்கள், தற்போது கிரிக்கெட் போட்டிக்காக செலவு செய்ய உள்ளனர். இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என தெரிவித்துள்ளார்.
விளையாட்டை விளையாட்டாக கடந்து போகமுடியவில்லை. காரணம், அதிலும் ஒரு பொருளாதாரம் ஒளிந்து கொண்டுள்ளது என்பது இப்போதுதான் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.