சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய இரயில் நிலையம் அமைக்கும் பணியில் தென்னக ரயில்வே வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, கிளாம்பாக்கத்தில் தமிழக அரசு நூற்றுக்கணக்கான பேருந்துகள் நிற்கும் அளவு பேருந்து நிலையம் அமைத்து வருகிறது. இங்கு, புற நகர் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் செல்லும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, பொது மக்கள் நலன் கருதி, மத்திய அரசு துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில், கிளாம்பாக்கத்தில் ரூ. 20 கோடியில் இரயில் நிலையம் அமைக்கும் பணியில் தென்னக ரயில்வே வாரியம் தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக, ரூ.20 கோடியில் புதிய இரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.
கிளாம்பாக்கத்தில் 3 நடைமேடை கொண்ட புதிய இரயில் நிலைய பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் நலனில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகுந்த அக்கறை காட்டி வருவதற்கு, தமிழக மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.