தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. தற்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 3 -வது முறையாக வெற்றி பெறும் நிலையில், உள்ளது. இதனா 3-வது முறையாக மோடி பிரதமாராக பதவியேற்க உள்ளார். தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஹாட்ரிக் வெற்றியை பாஜகவும், மோடியும் கொண்டாட உள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக-வைப் பலப்படுத்தும் பணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரவு – பகால் பாராமல் செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், சிறப்பாகச் செயல்படும் நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் ஒப்படைக்கப்படும் எனத் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வரும் 10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க ஆலோசனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.