கம்யூட்டர், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 90 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், குறிப்பாக, 58 சதவீதம் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், சுதேசி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கம்யூட்டர், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட 7 வகையான மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இது தொடர்பான அரசாணையை ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது.
வெளிநாட்டில் இருந்து கம்யூட்டர், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் இறக்குமதி செய்தால் அதன் மூலம் கிடைக்கும் லாபம் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கே சென்றுவிடும். அதற்கு பதிலாக, நமது நாட்டில் அதனை உற்பத்தி செய்தால், படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், அரசுக்கும் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளும் கிடைக்கும்.
மேலும், தரமான மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், இந்தியாவுக்கு பெருமளவு அன்னியச் செலாவணியும் கிடைக்கும். இதனால்தான், உள்நாட்டுப் பொருட்கள் உற்பத்திக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
பாரத மக்களிடம் வாங்கும் திறன் அதிகம் இருப்பதால், சீனா உள்ளிட்ட நாடுகள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு சந்தையாகவே நமது நாட்டை பயன்படுத்தி வருகிறது. அதேவேளையில், கொள்கை அளவில் இந்தியாவுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் பாரதத்தில் சுதேசி உற்பத்தி செய்வது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது, புதிய தொழில் அதிபர்களை உருவாக்குவது, புதிய தொழில்கள் மூலம் அரசுக்கு அதிக அளவு வருவாயை பெருக்குவது, பாரதத்தை ஒரு சந்தையாக மட்டும் பயன்படுத்தும் துரோக நாடுகளுக்கு செக் வைப்பது என, ஒரே கல்லில் பல மாங்காய் அடித்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு.