இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த 5,000 ஏவுகணைகள்: மேயர் உட்பட 5 பேர் பலி!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலை நோக்கிப் பாய்ந்த 5,000 ஏவுகணைகள்: மேயர் உட்பட 5 பேர் பலி!

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 03:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயுள்ள சர்ச்சைக்குரிய காஸா பகுதியில் இருந்து, இன்று அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் 5,000 ஏவுகணைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவி இருக்கின்றனர். இதில், மேயர் உட்பட 5 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதையடுத்து, இஸ்ரேல் போரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இஸ்ரேல் மற்றும்  பாலஸ்தீனத்துக்கு இடையே தன்னாட்சி பெற்ற காஸா பகுதி அமைந்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதி ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதேபோல, மேற்குக்கரைப் பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு நிர்வகித்து வருகிறது. அதேசமயம், மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஹமாஸ் அமைப்பைப் போலவே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட சில ஆயுதக்குழுக்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், ஹமாஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. காரணம், இந்த அமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், ஹாமஸ் அமைப்புக்குத் தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. அதேபோல, காஸாவைக் கைப்பற்ற இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக பாலஸ்தீனம் குற்றச்சாட்டி இருக்கிறது. இதனால், இரு நாடுகளும் தாக்குதல் நடத்திக் கொள்வது தொடர்கதையாக இருக்கிறது.

இந்த நிலையில்தான், காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட தீவிரவாதிகள் இன்று காலை முதல் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றன. காஸா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டிருக்கின்றன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தி வருகின்றனர். “அல் அக்சா பிளோட்” என்கிற பெயரில் இஸ்ரேல் மீது இத்தாக்குதலை தொடங்கி இருப்பதாக ஹமாஸ் தீவிரவாதிகள் அறிவித்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலில் இஸ்ரேலின் ஷார் ஹனேகேவ் நகர மேயர் ஓபிர் லீப்ஸ்டீன் உட்பட 5 இஸ்ரேலியர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. மேலும், இஸ்ரேலிய எல்லை நகரங்களில் உள்ள காவல் நிலையங்களையும் பாலஸ்தீனிய தீவிரவாதிகள் கைப்பற்றி இருப்பதாகவும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அபாய ஒலிகளை ஒலிக்கச் செய்த இஸ்ரேல் அரசு, போர் நிலை சூழல் உருவாகி இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து ஐ.டி.எஃப். எனப்படும் இஸ்ரேல் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல் நடந்திருக்கிறது. பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். இதனால், இஸ்ரேலின் தெற்கு மற்றும் மையப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, காஸாவை ஒட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் படைகளை தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். ஏற்கெனவே, உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் சூழலில், இஸ்ரேல் மீதான இத்தாக்குதல் இஸ்ரேல் – பாலஸ்தீன போருக்கு தூபம் போடுவதுபோல் அமைந்திருக்கிறது.

Tags: attackPalestineIsraelHamas Terrorist
Share
Tweet
SendShare
Previous Post

வெடிகுண்டு மிரட்டல் : என் ஐ ஏ தீவிர விசாரணை !

Next Post

இந்தியாவில் உற்பத்தியாகும் கூகிள் லேப்டாப் !

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies