வாரிச் சுருட்டியவர்கள் எல்லாம், அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் போல் இப்போது தப்பமுடிவதில்லை. காரணம், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, யார் தவறு செய்தாலும், அதை தெரிந்து செய்தாலும் சரி அல்லது தெரியாமல் செய்தாலும் சரி, தவறு தவறுதான் என்று, தயவு தாட்சன்யம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், வரி ஏய்ப்பு செய்தவர்களை சந்து பொந்துகளில் ஒளிந்திருந்தாலும் விடாமல் துரத்திச் சென்று நடவடிக்கை எடுத்து வருகிறது வருமானவரித்துறை. இதில், லேட்டஸாக சிக்கியவர் திமுக எம்பி கெஜத். கடந்த 5-ம் தேதி ஜெகத் வீடு, அலுவலகம், நட்சத்திர ஹோட்டல், மதுபான ஆலை, மருத்துவக்கல்லூரி என அவரது சாம்ராஜ்யத்திற்குள் புகுந்து சடுகுடு ஆடியது.
ஆடம்பர கார்களில் ஆவணங்கள் இருக்கிறதா என்றும், வீடுகளுக்குள் ரகசிய அறை அமைத்து ஆவணங்கள் பதுக்கப்பட்டதா என புதிய பாணியில் சோதனை நடைபெற்றது. ஆம், இன்று வெற்றிகரமான 3-வது நாள். வருமானவரித்துறை தனது ஆட்டத்தை அடித்து ஆடி வருகிறது.
அந்த வகையில், ஜெகத்-ன் மறைமுக உறவினர் கட்டுப்பாட்டில் பள்ளிக்கரணை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இது மிகவும் பரம ரகசியமான விசயம். அதையும் மேப்பம் பிடித்த வரித்துறை அங்கும் சென்று சோதனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே, பல்வேறு ஆவணங்கள், பல கோடி ரூபாய் ரொக்கம் என கைப்பற்றியுள்ளது வருமானவரித்துறை. இதில், வெளிநாட்டில் முதலீடுகள் அடங்கியுள்ளதாம். இதனால், அடுத்த கட்டமாக அமலாக்கத்துறையும் களத்தில் குதிக்க உள்ளதாம். ஆனால், அந்த நாள்தான் எந்த நாளோ என்று ஜெகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளார்களாம்.