சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு!
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்கள்: பிரதமர் மோடி ஆய்வு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், அதை செயல்படுத்துவது குறித்தும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் ஆய்வு செய்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து உரையாற்றும் பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் ஆற்றிய உரையில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மலிவு விலையில் கடன் வழங்குவதை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார். அதேபோல, நகரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், புதிய திட்டத்தை அரசு கொண்டு வருவதாகவும் பிரதமர் அறிவித்திருந்தார். மேலும், வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை உறுதி செய்வது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் உரையில், “நகரங்களில் வசிக்கும் நலிவடைந்த பிரிவினர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நடுத்தரக் குடும்பங்களுக்கு சொந்த வீடு வாங்குவது என்பது மிகப்பெரும் கனவாக இருந்து வருகிறது. ஆகவே, இதுபோன்ற நடுத்தரக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் புதிய திட்டத்தை வரும் ஆண்டுகளில் கொண்டு வருவோம். வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவர்கள் சொந்தமாக வீடு கட்ட விரும்பினால், அவர்களுக்கு வட்டி விகிதத்தில் நிவாரணம் மற்றும் பல லட்சம் ரூபாய் சேமிக்க உதவும் வங்கிகளில் கடன் வழங்குவோம்.

கொரோனா வைரஸ் காலத்தில், நாட்டை முன்னோக்கிச் செலுத்திய விதத்தில் நமது திறன்களை உலகமே கண்டது. உலகின் விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தபோது, ​​பெரிய பொருளாதாரங்கள் மீது அழுத்தம் இருந்த நேரத்தில் கூட, உலகம் வளர்ச்சியைக் காணும் என்று நாங்கள் கூறினோம். அந்த வளர்ச்சி மனிதனை மையப்படுத்தியதாகவும், மனிதாபிமானதாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வைக் காண முடியும். மேலும், மனித உணர்வுகளை விட்டு நம்மால் நல்வாழ்வை வாழ முடியாது என்பதை கோவிட் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று அறித்த திட்டங்கள் நிலை குறித்தும், அத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் ஆய்வு செய்தார். அப்போது, திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மோடி கூறுகையில், “இன்று இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக மாறி வருகிறது. உலகப் பொருளாதாரம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா தனக்கென ஒரு இடத்தை சம்பாதித்திருக்கிறது. இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை உலகில் ஸ்திரத்தன்மைக்கு உத்தரவாதம் என்பதை நம்பிக்கையுடன் கூற முடியும். எங்கள் மனதிலோ அல்லது எனது 140 கோடி குடும்ப உறுப்பினர்களின் மனதிலோ அல்லது உலகின் மனதிலோ இனிமேல் ‘ஆனால்’ அல்லது ‘என்றால்’ என்பது இல்லை. முடியும் என்கிற முழு நம்பிக்கை உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiSengaottaiReview meeting
Share
Tweet
SendShare
Previous Post

இன்று வருமானவரி துறை -நாளை அமலாக்கத்துறை ! திமுக பீதி !

Next Post

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies