சென்னையில் பராமரிப்பு காரணமாக, இன்று 44 புறநகர் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் பொது மக்கள் வசதிக்காவும் நகரின் பல்வேறுப் பகுதிகளை இணைக்கும் வகையிலும் 200-க்கும் மேற்பட்ட புறநகர் இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில், தினமும் 3 லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இரயில் தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் இன்று 44 புறநகர் மின்சார இரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை விழுப்புரம் வழித்தடத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3.15 வரையிலும், கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் சேவை முழுவதுவாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் வழித்தடத்திலும் புறநகர் இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.