13 வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று சாதனைகளை படைத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக நேற்று நடந்த உலகக்கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை எடுத்து இதுவரை உலகக்கோப்பை போட்டியில் அதிக ரன்களை எடுத்த அணி என்ற பெருமையுடன் தென் ஆப்பிரிக்கா அணி சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்கரம் அபாரமாக விளையாடி 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்து உலக கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று இரண்டாவது சாதனை படைத்தது.
இதுவரை உலக கோப்பை போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 3 வீரர்கள் சதம் அடிக்காத நிலையில் வரலாற்றில் முதல் முறையாக ஒரே இன்னிங்ஸ்யில் ஒரே அணி வீரர்கள் மூன்று சதங்களை அடித்து புதிய சாதனையை படைத்தனர்.
இதில் ரஸ்ஸி வான் டெர் டுசென் 110 பந்துகளில் 108 ரன்களும், ஐடன் மார்க்ராம் 54 பந்துகளில் 106 ரன்களும், குயின்டன் டி காக் 84 பந்துகளில் 100 ரன்களும் எடுத்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் புதிய மூன்று சாதனைகளை படைத்துள்ளது.