தேர்தல் வாக்குறுதிப்படி, பூசாரிகள் நல வாரியத்தை செயல்படுத்தினால். ஒவ்வொரு மாதமும் ஒரு பூசாரிக்கு ரூ. 2,000 கொடுக்க வேண்டும் என்பதால், திமுக வாரியமே செயல்படாமல் முடங்கிவைத்துள்ளது .
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோவில்களில் பணியாற்றும் கிராமக் கோயில் பூசாரிகளின் நலனுக்காக துவங்கப்பட்டதுதான் கிராமக்கோவில் பூசாரிகள் நல வாரியம். இதற்காக 15.3.2001-ல் அரசாணையும் வெளியானது.
வாரியத்தின் தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், நிதித்துறை, வருவாய்த்துறை, சமூக நலத்துறை அரசு செயலாளர்கள், மற்றும் தொழிலாளர் துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், நில நிர்வாகத் துறை இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (பொது) மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் (தலைமையிடம்) ஆகிய 9 அலுவலர்கள் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.
இந்த 9 அலுவல் சாரா உறுப்பினர்களும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசால் நியமிக்கப்படுவார். வாரியத்தில் உறுப்பினராக 25 வயது நிரம்பியிருக்கவேண்டும், 60 வயதிற்குள் இருக்கவேண்டும், உறுப்பினர் பணிபுரியும் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோவிலாக இருக்கவேண்டும், வழிபாடு ஆரம்பித்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கவேண்டும் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.
இந்நிலையில், தற்போது திமுக ஆட்சி அமைந்து இரண்டரை வருடமாகியும் கோமா நிலையிலையே கிடக்கிறது வாரியம்.
இது நாள் வரை மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது, கிராம கோவில் பூசாரிகளையும் விட்டுவைக்கவில்லை.