மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ விடுதி உள்ளிட்ட இடங்களில் பெயர்ப் பலகை வைப்பதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேசிய மருத்துவ கமிஷன்.
இது தொடர்பாகத் தேசிய மருத்துவக் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவ விடுதி உள்ளிட்ட இடங்களில் பெயர்ப் பலகையில், டாக்டர் பெயர், கல்வித் தகுதி, பதிவு எண் ஆகியவை மட்டுமே இருக்க வேண்டும்.
எந்த காரணத்தைக் கொண்டும் பெயர்கள் பெரிய அளவில் இருக்கக் கூடாது. சிறப்பு டாக்டர் என்றால், எந்த துறையில் சிறப்பு வாய்ந்தவர் என்பதை துள்ளியமாக்கக் குறிப்பிட வேண்டும். குறிப்பாக, மக்களைத் திசை திருப்பும் வகையிலும், குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் பெயர்ப் பலகைகள் இருக்கக் கூடாது.
இதேபோல, டாக்டர்கள் நோயாளிக்குக் கொடுக்கும் பிரிஸ் கிரிப்ஷனனிலும் இந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.