அத்திப்பள்ளி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில், பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.…
— K.Annamalai (@annamalai_k) October 8, 2023
தமிழக கர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில், பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக
சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோர் அனைவரும், விரைவாக நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கான உயர்தர சிகிச்சையை உறுதி செய்யுமாறு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.