திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரத்தக் கொதிப்பு ஏற்பட்டதன் காரணமாகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நலம் தேறிய பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின்னர் அவர் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுமா? அல்லது சிறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுமா? எனத் தெரியவரும்.