உலக அஞ்சல் தினம் !
Sep 13, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அஞ்சல் தினம் !

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 10:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“நலம், நலமறிய ஆவல்” இதை எங்கோக் கேட்டதும் போல் இருக்கின்றதா ? வேறு எங்கேயும் இல்லை நாம் பல காலமாக அஞ்சல் மூலம் பயன் படுத்தி வந்த சொற்றொடர் தான். இன்று ஏன் நாம் அதைப் பற்றி பேச வேண்டும் என்று எண்ணுகிறீர்களா ? ஆம் இன்று உலக அஞ்சல் தினம்.

தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள இந்த காலத்தில் 10000 கிமி தொலைவில் இருப்பவரை கூட ஒரு வினாடியில் அழைத்துப் பேசவோ இல்லை பார்க்கவோ முடிகிறது. ஆனால் தொழிநுட்பம் குறைந்தேக் காணப்பட்ட அந்த காலத்தில் தகவல் பரிமாரியாக இருந்தது அஞ்சல் மட்டுமே.

1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டில் பேர்ன் மாநகரில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் விதமாக, உலக அஞ்சல் தினம் உருவானதாக கூறப்படுகிறது. இந்த தினத்தை உலகளவில் தபால் வழி தகவல் தொடர்பை கடைப்பிடிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொண்டாடி மகிழ்கின்றன. இவ்வாறு ஒரு தினத்தைக் கொண்டாடலாம் என அனைத்துலக அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் 1969ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. அந்த மாநாடு நடைபெற்ற இடம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே எண்ணற்ற மக்கள் தொகை கொண்ட நாடுகளில், இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. எனவே, அதன் தேவை அதிகம் என்பதை உணர்ந்து 1764ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான், இந்திய தபால் துறை. இதனையடுத்து இந்த துறை பிரிட்டிஷ் அரசின் கீழும், விடுதலைக்குப் பின் தற்போது இந்திய அரசின் கீழும் செயல்பட்டு வருகிறது. இந்திய முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக இதுவரை 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் மக்களுக்கான கடிதப் போக்குவரத்துக்கு சேவையாற்றி வருகின்றன. இதில் பெரும்பான்மையானவை கிராமங்களில் தான் செயல்படுகின்றன.

இன்றைய காலத்தில் என்னதான் போனில் வாட்ஸ்அப், இ – மெயில் போன்றவற்றை விரல்நுனியில் தட்டி தகவல்களை பரிமாறினாலும் உணர்வுப்பூர்வமாக உறவுகள் வளர்ந்த கதை, காதல் வளர்ந்த கதை, பலருக்கு அரசுப்பணி கிடைத்த நாள், மணி ஆர்டர் மூலம் பணம் பெற்றநாட்கள் ஆகியப் பல நினைவுகள் நீங்காமல் பசுமை மாறாமல் நமது மனதில் என்றும் நிலைத்திருக்கும். தபாலுடன் நமக்குள் இருக்கும் பந்தத்தை, உலக அஞ்சல் தினமான இன்று நினைத்துப் பார்ப்போம்.

Tags: POST OFFICEWorld Postal Day!
Share
Tweet
SendShare
Previous Post

தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்த தினம் இன்று!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் மீண்டும் அட்மிட்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies