பேறுகால விடுமுறை நாட்களை பணிக்காலமாக கருத முடியாது!- சென்னை உயர் நீதிமன்றம்!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேறுகால விடுமுறை நாட்களை பணிக்காலமாக கருத முடியாது!- சென்னை உயர் நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2023, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி என்ற வழக்கில்  சென்னை உயர் நீதிமன்றம் பணிக்காலமாக கருத முடியாது என உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், சென்னை மாவட்டத்துக்கு, 2018 ஆகஸ்ட்டில் இடமாற்றம் செய்யப்பட்டார்; 2019 ஜனவரியில் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார்.

இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தின் போது, 2020 மார்ச் முதல் டிசம்பர் 1 வரை, 9 மாதங்கள் பேறுகால விடுமுறை எடுத்தார்.

இந்த விடுமுறை காலத்தை பணிக்காலமாக கருதாததால், தன்னை விட இளையவர்கள், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று விட்டதாகவும், எனவே, பேறுகால விடுமுறையை பணிக்காலமாக கருதி, தாசில்தாராக பதவி உயர்வு வழங்க கோரியும், உயர் நீதிமன்றத்தில், நாகஜோதி வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ”முழு சம்பளத்துடன், பேறுகால விடுமுறை எடுக்க உரிமை உள்ளபோது, அந்த விடுமுறை நாட்களை பணிக்காலமாகவே கருத வேண்டும்.

”கேரளாவில் உள்ள பணி விதிகளின்படி, பயிற்சி காலத்தின் போது பேறுகால விடுமுறை எடுத்தால், பணிக்காலமாக கருதப்படும். அந்த விதி, தமிழகத்தில் இல்லை என்றாலும், மகளிருக்கு அந்த சலுகையை வழங்க வேண்டும்,” என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எம்.அழகு கவுதம், ”விடுமுறை நாட்களை, முழு பணிக்காலமாக கருத முடியாது,” என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி என்.சதீஷ்குமார், வருவாய் பணி விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். அதனால், பயிற்சி காலத்துக்கு முழு விலக்கு கோர முடியாது. பயிற்சி காலத்தின் போது, பல தேர்வுக்கு உட்பட வேண்டும்.

பயிற்சி காலத்தை பூர்த்தி செய்யும்பட்சத்தில், நிரந்தர பணியில் வரன்முறை செய்யப்படுவர். எனவே, பயிற்சி காலத்தை வெறும் சம்பிரதாயமாக கருத முடியாது.

பேறுகால விடுமுறையை, பயிற்சி காலத்தின் போது எடுத்திருந்து, அந்த நாட்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், பயிற்சி காலத்தை நீட்டிக்க, நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. விதிகளில் எந்த திருத்தங்களையும் கொண்டு வருவது, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

அதற்காக அரசுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பேறுகால விடுமுறையை, பணிக் காலமாக கருதும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: chennai high court
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் மீண்டும் அட்மிட்!

Next Post

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies