இரயில் தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரம் – திருப்பதி இடையேயான இரயில் சேவை 15-ஆம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு மத்திய இரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில், தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, விழுப்புரம் – திருப்பதி இடையேயான முன்பதிவு இல்லாத விரைவு இரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரத்தில் இருந்து காலை, 5:35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – திருப்பதி முன்பதிவு இல்லாத விரைவு இரயில், காட்பாடி – திருப்பதி இடையே, இன்று முதல், 15-ஆம் தேதி வரை இரத்து செய்யப்படுகிறது. இந்த இரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல், 1:40 மணிக்குப் புறப்படும் திருப்பதி – விழுப்புரம் முன்பதிவு இல்லாத விரைவு இரயில், திருப்பதி – காட்பாடி இடையே, இன்று முதல், 15-ஆம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி – காட்பாடி, காட்பாடி- திருப்பதி பயணியர் இரயில்கள் மற்றும் காட்பாடி- ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை – காட்பாடி விரைவு சிறப்பு இரயில்களின் சேவையும், வரும் 15-ஆம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது.