ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரில் நேற்றையப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற்றது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருது தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 201 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.
சேப்பாக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்ட பிட்ச், பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் சம வாய்ப்பை வழங்கியது. இப்படியான பிட்சுகளை உலகக்கோப்பை தொடரில் அமைக்க வேண்டும் என்று இரசிகர்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர்தனது எக்ஸ் பதிவில் டாஸ் வென்ற பின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சரியமான முடிவாக இருந்தது. நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை 199 ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டியதை ஆதிக்கம் என்றே சொல்லலாம். அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் மிகச்சிறப்பான பந்துவீச்சை தொடங்கியது.
ஆனால் இடதுகை ஸ்பின்னர் அணியில் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பார்ட்னர்ஷிப்பும் ஆட்டத்தை இந்திய அணி பக்கம் திருப்பியது. இருவரும் போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டு மிகச்சிறந்த ஷாட்களை ஆடினார்கள். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ரன்கள் சேர்ப்பதற்கு உதவியாக பந்து சரியாக பேட்டிற்கு வந்தது என்று தெரிவித்துள்ளார்.