நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியில் நடந்த ஒரு சில சுவாரசியமான நிகழ்வுகளை மீம்ஸ் மாற்றி இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் அதில் ஒரு சில மீம்ஸை பாப்போம்.
இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, விராட் கோலி – கேஎல் ராகுல் இருவரும் இணைந்து வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதனை மார்க் ஆண்டனி படத்தில் வரும் ரவுடிகள்னா ஒரு டிசிபிளின் வேண்டாம் என்று எஸ்ஜே சூர்யா சொல்லும் வசனத்தை மாற்றி, சேஸிங்னா ஒரு டிசிபிளின் இருக்கனும்டா.. எத்தனை சேஸிங் பார்த்துருப்பேன் என்று விராட் கோலி சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் இஷான் கிஷன், ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். இதனை பிரெண்ட்ஸ் படத்தில், நினைவை மறக்கும் சார்லியிடம் வடிவேலு, நான் உன் பாஸ் நேசமணி.. நீ என்கிட்ட லேபரா வேலை பார்த்தா என்று சோகத்துடன் சொல்லுவார். அதில் வரும் வடிவேலு சொல்வது இந்திய இரசிகர்கள் சொல்வதாக மாற்றி, “டேய் இது பயிற்சி ஆட்டம் இல்லடா.. ரியல் மேட்ச்சு..” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ஜடேஜா வெறும் 28 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 ஓவர்கள் மெய்டன் செய்ததோடு, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனையடுத்து சிஎஸ்கேவுக்காக இதே மைதானத்தில் நான் விளையாடுகிறேன் என்று பேட்டியும் அளித்தார். அதனை கேஜிஎஃப் ராக்கி பாய், “திஸ் இஸ் மை டெர்ரிடரி” என்று சொல்வதோடு ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர், அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது விக்கெட்டை வீழ்த்த இந்தியாவின் அஸ்வின் போராடினார். ஆனால் அட்டாக்கில் வந்த குல்தீப், வார்னரை எளிதாக வீழ்த்தி அசத்தினார். இதனை பாட்ஷா படத்தில் ரஜினி, “ஐயா.. என் பேரு மாணிக்கம்” என்று சொல்வதை போல் வார்னரிடம், “ஐயா.. என் பேரு குல்தீப்” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்க முடியாமல் போனது போல், நேற்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுலாலும் சதமடிக்க முடியவில்லை. இதனால் வெற்றிபெற்ற பின் கேஎல் ராகுல் பேட்டை பிடித்து கொண்டு கீழே அமர்ந்தார். இதனை ராஞ்சனா படத்தில் வரும் தனுஷ் குட்டி தனுஷை பார்க்கும் படத்துடன் ஒப்பிட்டு தனுஷாக கம்பீரையும், குட்டி தனுஷாக கேஎல் ராகுலையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.