ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர்களை வாழ்த்தும் விதமாக நாளை பாரத பிரதமர் மோடி வீர்ரகளை சந்திக்கவுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் உட்பட மொத்தமாக 107 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது.
இதில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் பாரத பிரதமர் அவர்கள் நாளை மாலை 4:30 மணியவில் டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் பதக்கம் வென்ற வீரர்களை சந்திக்க உள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சாதித்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவும், எதிர்காலப் போட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பிரதமர் வீரர்களை சந்திக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணியை சேர்ந்தவர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள், இந்திய மற்றும் ஒலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள், தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்குபெறவுள்ளனர்.