திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரத்தக் கொதிப்பு மற்றும் காலில் மரத்து போதல் உணர்வு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, புழல் சிறையில் இருந்து சென்னையில் அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு இன்று காலை அவர் அழைத்து வரப்பட்டார். அங்கு, அவருக்கு, இரத்தக் கொதிப்பு மற்றும் இருதயவியல் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
















