விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 315 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் India TV- CNX கருத்துக் கணிப்பில் முடிவுகள் தெரிய வந்துள்ளது.
பாஜக 2 முறை ஆட்சி செய்துள்ள நிலையில், 3 -வது முறையாகவும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்ய தயாராகி வருகிறது. அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பொது மக்களும் பாஜகவை முழு மனதோடு ஆதரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று, கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவு குறித்து India TV- CNX கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில், 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி 172 இடங்கள் மட்டுமே பெறும் என்றும், மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆகியோர் இணைந்து 56 இடங்கள் பெறலாம் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வருவார் என்றும், மத்தியில் மீண்டும் பாஜகவின் ஆட்சியே அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் மீண்டும் பிரதமராக மோடியே வருவார் என்றும், மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.