5 மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொது மக்கள் மற்றும் வணிகர்கள் 50 ஆயிரம் ரூபாய்-க்கு மேல் கொண்டு சென்றால், அதற்கான ஆதராங்களை தேர்தல் அதிகாரிகளிடம் காட்ட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்த உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதால், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என அனைவரும் தேர்தல் விதிகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ய முடியும். ஏன், சிறைத் தண்டனை கூட வழங்க முடியும். அந்த அளவு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில், தலைமைத் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ள நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதனால், 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதற்கான ரசீது மற்றும் ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இல்லை என்றால் தேர்தல் அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்து விடுவார்கள்.
மருத்துவமனை கட்டணங்களைச் செலுத்துவதற்கும் கூட, அதற்கான ரசீது கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.