நவராத்திரி கொண்டாட்டத்திற்காக குஜராத்தின் காந்திநகரில், ‘ராம ராஜ்யம்’, ‘ராமர் கோவில்’, ‘சந்திராயன்-3 வெற்றி’ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, போன்றவற்றைக் காட்டும் தனித்துவமான தலைப்பாகையை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான, நவராத்திரி கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. குறிப்பாக நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகளைப் பிரமாண்டமான முறையில் மேற்கொண்டனர்.
நவராத்திரி அமைப்பாளர்கள் தங்கள் நடன நிகழ்வுகளுக்கு சிறந்த மற்றும் தனித்துவமான கருப்பொருளை உருவாக்கினர்.
இந்நிலையில் குஜராத் காந்திநகரில் நவராத்திரி கொண்டாட்டத்திற்காக ராமர் கோவில், சந்திரயான்-3 மற்றும் பிரதமர் மோடியின் கருப்பொருளில் 3 கிலோ எடையுள்ள ‘ராம ராஜ்யம்’ தலைப்பாகை தயாரிக்கப்பட்டுள்ளது.
3 கிலோ எடையுள்ள தலைப்பாகையில் அயோத்தியின் ராமர் கோவிலின் மினியேச்சர், பிரதமர் மோடியின் சிறிய சிலை, ‘ஃபிர் ஏக் பார் மோடி சர்கார் (மீண்டும் மோடி அரசு), இரண்டு மயில் பொம்மைகள், சந்திராயன்-3 வெற்றியை குறிக்கும் சந்திரயான்-3-ன் சின்னம் மற்றும் நிலவில் இந்தியர்கள் கால் பதித்தது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, இரண்டு பொம்மைகள் – ‘தண்டியா உடையில்’ ஆண், பெண்ணின் சிறிய சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்து பண்டிகையான நவராத்திரி இந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் அக்டோபர் 24 வரை கொண்டாடப்படவுள்ளது. இந்த பத்து நாட்களில் மக்கள் தாண்டியா மற்றும் கர்பா நடனத்தில் பங்கேற்கின்றனர். குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி-என்சிஆர் ஆகிய இடங்களில் உள்ள அமைப்பாளர்கள் விழாவைக் கொண்டாட பெரிய நிகழ்வுகளை நடத்துகின்றனர்.